மக்காவில் தென்பட்ட சூரிய கிரகணம்.
வானில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு கிரகணம் எனப்படுகிறது. வெகு தொலைவில் இருக்கும் சூரியனை அளவில் சிறிய சந்திரன் மறைப்பது போல தோன்றும் இது சூரிய கிரகணம் எனப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் நேற்று இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளில் பகுதி அளவு தெரிந்தது.
வளைகுடா நாடுகளிலும் சூரிய கிரகணம் தென்பட்டது. மக்காவிலும் பகுதி அளவு கிரகணம் காட்சி தந்தது. கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் பல இடங்களில் நடைபெற்றன.