வெளிநாட்டில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு காப்பீடு பாலிசி கட்டாயம்!

வெளிநாட்டில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு காப்பீடு பாலிசி கட்டாயம்!

ரியாத்: சவுதி அரேபியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு காப்பீடு பாலிசி கட்டாயம் என்று சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது விசா கட்டணத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுதாரருக்கு ஒரு லட்சம் ரியால்கள் வரை விரிவான கவரேஜ் கிடைக்கும். அவசரகால சுகாதார நடவடிக்கைகல், கோவிட் தொற்று, பொது விபத்துக்கள் மற்றும் இறப்புகள், விமானம் ரத்து செய்தல் அல்லது புறப்படும் விமானங்களின் தாமதம் ஆகியவை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் என்றும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி உம்ரா சீசன் தொடங்கியதில் இருந்து 176 நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, ஈராக் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வரும் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க சுமார் 150 உம்ரா நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அந்தந்த நாடுகளில் இருந்து வருகையிலிருந்து உம்ராவில் இருந்து திரும்பும் வரை தேவையான அனைத்து சேவைகளையும் வழங்குவதாக ஹஜ் மற்றும் உம்ரா தேசிய குழு உறுப்பினர் ஹானி அல்-உமைரி தெரிவித்தார்.

யாத்ரீகர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக மன்னர் சல்மான் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் நியமிக்கப்பட்டன.

யாத்ரீகர்கள் வசதியுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் தமது கடமைகளைச் செய்வதற்கு சவூதி அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தோனேசியா, ஈராக் மற்றும் துருக்கி தவிர, பாகிஸ்தான், மலேசியா, இந்தியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் உம்ரா