சவூதி மெக்காவில் கடும் மழை வெள்ளப்பெருக்கு..! - வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன..!

சவூதி மெக்காவில் கடும் மழை வெள்ளப்பெருக்கு..! - வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன..!

சவூதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக சொத்துக்களுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

புனித நகரத்தில் பெய்த கனமழையின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓட்டுநர்களை மீட்கவும், சிக்கித் தவிக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். எனினும், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெள்ளிக்கிழமை வானிலை எச்சரிக்கையை வெளியிட்டது, அது இரவு 9 மணி வரை செயலில் இருக்கும்.

மெக்கா பேரிடர் மேலாண்மை மையம், தேவையின்றி தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை எச்சரித்தது. மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளை மக்கள் அணுகாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.