FIFA உலகக்கோப்பை: அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி!

FIFA உலகக்கோப்பை: அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி!

கத்தார் உலகக் கோப்பை தொடரின் குரூப் சி முதல் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது சவுதி அரேபியா கால்பந்து அணி. 

போட்டியின் முதல் பாதியில் மெஸ்ஸியின் பெனால்டி கோலால் முன்னிலையில் இருந்த அர்ஜென்டினாவை இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா நடுநிலைப்படுத்தியது. இரண்டாவது பாதியின் 48வது நிமிடத்தில் சவுதி வீரர் சாலிஹ் அல் ஷெஹ்ரி ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை அதிர வைத்தார்.

53வது நிமிடத்தில் சலீம் அல் தௌசாரி இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் ஆட்டத்தில் சவுதி ஒரு கோல் முன்னிலை பெற்றது (2-1). பின்னர் அர்ஜென்டினாவை அதிரவைக்கும் ஆட்டத்தை சவுதி வெளிப்படுத்தியது. கூடுதல் நேரம் வரை ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தபோதிலும், அர்ஜென்டினாவால் மீண்டும் முன்னிலை பெற முடியவில்லை. இறுதியாக, உலகக் கோப்பையில் முதல் வெற்றியை சவுதி பதிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அரேபிய மண்ணில் சவுதி அணி தங்கள் கனவை நனவாக்கியதை அந்நாட்டு மக்கள் உள்பட வளைகுடா நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.