அல்-உலா பழைய நகரம் உலகின் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக தேர்வு!

அல்-உலா பழைய நகரம் உலகின் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக தேர்வு!

சவூதி அரேபியா ஒரு அழகான நாடு, இது பல வரலாற்று இடங்கள் மற்றும் அழகான சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ளது. அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ள அழகிய பாலைவனம் பார்வையாளர்களின் கண்களை ஈர்க்கிறது. அதன் கவர்ச்சிகரமான கட்டிடங்கள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு இந்த நாட்டின் அழகை மேம்படுத்துகிறது.

இந்நிலையில் சவுதி அரசின் திட்டமிடலில் பண்டைய நகரமான அல்-உலாவுக்கான (AlUla) ராயல் கமிஷன் RCU பாரம்பரிய தளங்களை புதுப்பித்து மீட்டெடுத்து வருகின்றது. அதன் பயனாக, 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) 32 சிறந்த சுற்றுலா கிராமங்களின் பட்டியலில் அல்-உலா பழைய நகரம் உலகளாவிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை AlUla க்கான ராயல் கமிஷன் (RCU) அறிவித்துள்ளது.

விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவித்ததன் விளைவாகவும், சேவைகள் மற்றும் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதன் விளைவாகவும் இது வந்தது என RCU தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு மூலம் கிராமங்களுக்கு விரிவான சுற்றுலாவைப் பயன்படுத்துவதன் விளைவாக  இந்த சாதனை நிகழ்ந்தது என தெரிவித்துள்ளது.

அல்-உலா பழைய நகரம் மண் செங்கற்களால் ஆன 900 வீடுகள், கூடுதலாக 400 கடைகள் உள்ளிட்ட பல தொல்லியல் கூறுகளை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி: தைமா, அல்-உலா, கெய்பர், ஹதாஜ் கிணறு - பாரம்பரியங்களை மீட்டெடுக்கும் திருவிழா!