அபுதாபி பிக் டிக்கெட்டில் 2 கோடி ரூபாய் வென்ற இந்திய பெண்!
அபுதாபி பிக் டிக்கெட் வாராந்திர இ-டிராவில் இந்திய பெண் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய் (10 லட்சம் திர்ஹம்) கிடைத்துள்ளது. இந்தியாவிலிருந்து கணவரை பார்க்க வந்த இளம்பெண் வர்ஷா குண்டா என்ற பெண் தான் கோடிகளை பரிசாக பெற்றுள்ளார்.. டிசம்பர் 3-ம் தேதி நடந்த டிராவில் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் (30 லட்சம் திர்ஹம்) வெல்லும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது.
பிக் டிக்கெட் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த வர்ஷா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் தனது கணவருடன் கடந்த 3 ஆண்டுகளாக தனது அதிர்ஷ்டத்தை சோதித்து வந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வந்த அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குத் திரும்பினர். சமீபத்தில் அவர் கணவரை பார்க்க மீண்டும் வந்தபோதுதான் அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுத்துள்ளது. பிக் டிக்கெட் குழு வர்ஷாவுக்கு போன் மூலம் தொடர்பு கொள்ள இயலாத நிலையில், பின்னர், கணவருக்கு மின்னஞ்சல் மூலம் பரிசு கிடைத்த தகவல் அளிக்கப்பட்டது.