துபாயில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு!

துபாயில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு!

துபாய்:  வாழ்க்கையில் நூற்றாண்டை கடந்தவர்களின் எண்ணிக்கையில் துபாய் புதிய சாதனையை எட்டியுள்ளதாக சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 57 பேர் நூறு வயதை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில், 100 ஐத் தாண்டியவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில் தற்போது அது இரட்டிப்பாகியுள்ளது. மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் 119 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 47% பேர் நல்ல ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ சிறப்பு கவனிப்பு தேவைப்படாதவர்கள். 

அந்த அறிக்கையின்படி, அதிக ஆயுட்காலம் என்பது, நாட்டின் மூத்த குடிமக்களைப் பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துவதன் விளைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.