அபுதாபியில் 159 பிச்சைக்காரர்கள் கைது!
புதாபியில் 159 பிச்சைக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இந்த ஆண்டு நவம்பர் 6 முதல் டிசம்பர் 12 வரை அமீரகத்தில் பிச்சைக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிச்சைக்காரர்கள் மக்களின் அனுதாபத்தை ஈர்ப்பதற்காக கதைகளைப் புனைந்து மக்களிடம் பணம் கேட்கிறார்கள். சில பெண்கள் கைகளில் குழந்தைகளுடன் பிச்சை எடுகிறார்கள். இதுபோன்ற கதைகளை நம்பி அவர்களுக்கு பணம் வழங்கி ஊக்கப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். பிச்சை எடுப்பதும், அன்னதானம் செய்வதும் நாட்டில் குற்றமாகும்.
பிச்சைக்காரர்களை தடுக்கும் பிரச்சாரங்களில் பரவலாக கைதுகள் நடைபெறுகின்றன. பிச்சை எடுப்பதைக் குறைக்க பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை முறையாகச் செய்து ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
நன்கொடைகள் சரியான நபர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பிச்சை எடுப்பது தொடர்பான வழக்குகள் கண்டறியப்பட்டால் 999 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.