யுஏஇ-ல் இனி 10,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வெளியுறவு அமைச்சகத்தின் சான்றொப்பம் கட்டாயம்! 

யுஏஇ-ல் இனி 10,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வெளியுறவு அமைச்சகத்தின் சான்றொப்பம் கட்டாயம்! 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 10,000 திர்ஹம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வெளியுறவு அமைச்சகத்தின் சான்றொப்பம் இனி கட்டாயமாக்கப்படும். புதிய நிபந்தனை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இன்வாய்ஸ்களை சான்றளிக்க ஆன்லைன் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை AED 10,000 க்குக் குறைவான பொருட்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான இறக்குமதிகள், GCC நாடுகளில் இருந்து இறக்குமதிகள் மற்றும் ஃப்ரீ ஷோன் மண்டலங்களுக்கான பொருட்களுக்கு பொருந்தாது. போலீஸ், இராணுவம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கும் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.