சமூக வலைதளங்களில் அணுகலில் கவனம் தேவை..! - ஷார்ஜா காவல்துறை

சமூக வலைதளங்களில் அணுகலில் கவனம் தேவை..! - ஷார்ஜா காவல்துறை

ஷார்ஜா: சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் தார்மீக மற்றும் நெறிமுறை மதிப்புகளுக்கு எதிரானவற்றைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் பெரும் அபராதம் விதிக்கப்படும் என்று ஷார்ஜா காவல்துறை அறிவித்துள்ளது. 

சமூக ஊடகங்களை அணுகுவது ஆரோக்கியமானதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களை எதிர்மறையாக தவறாக பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த ஆண்டு, ஷார்ஜா காவல்துறை சமூக ஊடகங்களில் மோசமான தொடர்புகள் குறித்து 85 புகார்களைப் பெற்றுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் மத்திய அரசின் சட்டம் 34ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். சிறை தண்டனையுடன் கூடுதலாக 2.5- 5 லட்சம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும்.