கனமழையில் நனையும் அமீரகம்...!

கனமழையில் நனையும் அமீரகம்...!

அபுதாபி/துபாய்: அமீரகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. துபாயில் இரவில் தொடங்கிய மழை 24 மணி நேரத்திற்கு பிறகும் தொடர்கிறது. அனைத்து எமிரேட்களிலும் கனமழை பெய்தது.

ஷார்ஜாவில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. பள்ளத்தாக்கின் சில சாலைகள் மலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் உள்ள வெள்ளநீர்கள் மோட்டார் மூலம் பம்பிங் செய்து அகற்றப்படுகிறது. சீரற்ற காலநிலை காரணமாக ஷார்ஜாவில் பூங்காக்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. துபாயில் உள்ள குளோபல் வில்லேஜ் நேற்று திறக்கப்படவில்லை. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அஜ்மானில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில விபத்துகள் நடந்தன, ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இன்றும் மழை தொடரும். கனமழை காரணமாக ஷார்ஜா மற்றும் துபாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் தங்களுடைய இலக்கை அடைய பல மணி நேரம் ஆனது. சில இடங்களில் பலத்த காற்று வீசியது. டால்மா தீவில் இருந்து 42 கி.மீ தொலைவில் உள்ள அபுதாபியில், காலையில் கனமழை பெய்தது.