அபுதாபி பிக் டிக்கெட் மூலம் ரூ.2 கோடி பரிசு வென்ற ஹோட்டல் ஊழியர்!

அபுதாபி பிக் டிக்கெட் மூலம் ரூ.2 கோடி பரிசு வென்ற ஹோட்டல் ஊழியர்!

அபுதாபியில் நடைபெற்று வரும் பிக் டிக்கெட்டில் (Big Ticket draw) மாதாந்திர டிராவுடன் சேர்த்து சமீப காலமாக வாராந்திர டிராவும் (weekly e-draw) நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் மாதம் நடந்த அபுதாபி பிக் டிக்கெட்டின் முதல் வாராந்திர இ-ட்ராவில் கேரளாவை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி மகேஷ் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை அடுத்து அவருக்கு  ஒரு மில்லியன் திர்ஹம்கள் (ரூ.2 கோடி) பரிசு மழை கிடைத்துள்ளது. 

கடந்த ஆறு வருடங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வரும் மகேஷ், ஃபுஜைராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக உள்ளார். அவர் தற்போது புஜைராவில் வசிக்கிறார். மகேஷ் பிக் டிக்கெட் பற்றி நண்பர் ஒருவரிடமிருந்து அறிந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக 10 நண்பர்களுடன் பிக் டிக்கெட்டில் பங்கேற்று வருகிறார். 

கடந்த மாத இறுதியில் பிக் டிக்கெட்டின் பை டூ கெட் ஒன் இலவச ஆஃபரைப் பயன்படுத்தி டிக்கெட்டை வாங்கியதில் இலவச டிக்கெட்டுக்கு இந்த பரிசு மழை கிடைத்துள்ளது. 

பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் போட்டியை நேரலையில் காணலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த கோடீஸ்வரர்களாக மாற, வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கிறது. டிக்கெட்டுகளை பிக் டிக்கெட் இணையதளத்தில் இருந்தும் www.bigticket.ae, அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல்ஐன் விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் ஸ்டோர் கவுண்டர்கள் மூலமாகவும் வாங்கலாம். 

பிக் டிக்கெட் பற்றிய சமீபத்திய தகவல் மற்றும் செய்திகளை அறிய, அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களைப் பார்வையிடவும்.

பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bigticket.ae மற்றும் சமூக ஊடக தளங்களில், உத்தரவாதமான டிரா பரிசுகளை வென்றவர்களின் விவரங்கள் அடுத்த நாட்களில் வெளியிடப்படும்.

தொடர்புடைய செய்தி: பிக் டிக்கெட் டிரா: வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு