ரியாத் விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட 3, 4வது டெர்மினல்கள் திறப்பு!

ரியாத் விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட 3, 4வது டெர்மினல்கள் திறப்பு!

ரியாத்: சவுதி தலைநகர் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் முடிவுற்ற நிலையில் 3 மற்றும் 4வது டெர்மினல்கள் திறக்கப்பட்டுள்ளன. 

ரியாத் விமான நிலையத்தின் ரியாத் விமான நிலைய நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த டெர்மினல்களில் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த இரண்டு டெர்மினல்களும் விரிவாக்கம் செய்யப்படுவதால், ஆண்டுக்கு 1.3 கோடி பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் இந்த விமானநிலையத்தில் உள்ளது என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரியாத் கவர்னர் பைசல் பின் பந்தர் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் இளவரசர் விரிவாக்கப்பட்ட டெர்மினல்களை திறந்து வைத்தார். போக்குவரத்து தளவாட அமைச்சர் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் என்ஜி. சலே பின் நாசர் அல்-ஜாசர், சிவில் ஏவியேஷன் ஜெனரல் அத்தாரிட்டியின் தலைவர் அப்துல்அஜிஸ் பின் அப்துல்லா அல்-துவைலாஜ் மற்றும் பலர் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.