வண்ணமயமான காட்சியுடன் அமைக்கப்பட்ட ‘தோஹா மலைகள்!’

வண்ணமயமான காட்சியுடன் அமைக்கப்பட்ட ‘தோஹா மலைகள்!’

தோஹா:  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காணவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான கலைப் படைப்பாக இருக்கும் வகையில் ஸ்டேடியம் 974க்கு அருகில் ``தோஹா மலைகள்'' வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ராஸ் அபு அபூத் கடற்கரையில் இந்த தோஹா மலைகள் நிறுவப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணங்களின் கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுவிஸ் கலைஞரான ஹியூகோ ரோண்டினனின் இந்த படைப்புகள், கத்தார் அருங்காட்சியகங்களின் தலைவர் ஷேக்கா மயாசா பின்த் ஹமத் அல் தானியால்  திறந்து வைக்கப்பட்டது.

இந்த விழாவில் கத்தார் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஷேக் ஜுவான் பின் ஹமத் அல் தானி, கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் முதல் துணைத் தலைவர் டாக்டர். டாக்டர் முகமது பின் யூசுப் அல் மனா, இரண்டாவது துணைத் தலைவர் தானி பின் அப்துல்ரஹ்மான் அல் குவாரி, பொதுச் செயலாளர் ஜாசிம் பின் ரஷீத் அல் புனைன், சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு இயக்குநர் ஷேக்கா அஸ்மா அல் தானி ஆகியோர்  கலந்து கொண்டனர். 

தோஹா மலை கலைப்படைப்பு ஒலிம்பிக் வளையங்களின் வண்ணங்களில் அமைந்துள்ளது. நட்பு, மரியாதை மற்றும் சிறந்து விளங்கும் ஒலிம்பிக் விழுமியங்களுக்கு கத்தாரின் அர்ப்பணிப்பு கலைப்படைப்பிலும் பிரதிபலிக்கிறது.