வளைகுடா நாடுகளில் நில அதிர்வு!
அபுதாபி: தெற்கு ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லேசான அளவில் உணரப்பட்டுள்ளது. பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையமும் நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ளது.