துபாயில் உள்ள புதிய இந்து கோவிலை பார்வையிட்ட ஆனந்த் மஹிந்திரா
துபாய்: துபாயில் உள்ள பக்தர்களுக்காக திறக்கப்பட்ட புதிய இந்து கோவிலை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பார்வையிட்டார். கோவில் முன்பு நிற்கும் படத்தை ட்வீட் செய்துள்ள அவர், “இறுதியாக துபாய் ஜெபல் அலியில் உள்ள அழகான, நன்கு பராமரிக்கப்பட்ட புதிய கோவிலுக்குச் சென்றேன். அதில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் தெய்வம் உள்ளது” - என்று ட்வீட் செய்துள்ளார்.
Finally made my visit to the splendid, well-managed new Temple in Jebel Ali, Dubai. They even have a murti of Shri Shirdi Sai Baba. pic.twitter.com/XAHSJlyHuR
— anand mahindra (@anandmahindra) October 28, 2022