உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு அறிமுகமாகும் ‘லாயீப்’
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘லாயீப்’ என்ற ‘அதிக திறமையான வீரர்’ அறிமுகமாகிறார்.
கத்தார் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் ‘லாயீப்’ மத்திய கிழக்கில் பிறந்திருக்கலாம். ஆனால், நினைவு பரிசுகளின் குடும்பம் தெற்கு சீன தொழில்துறை நகரமான குவாங்டாங்கில் வளர்ந்தது. உலகின் மிகப்பெரிய பொம்மைகளை ஏற்றுமதி செய்யும் நாடு சீனா. அவற்றில் 70 சதவீதம் இங்கு குவாங்டாங்கில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா முடக்கம், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு, தொழிலாளர் மற்றும் சர்வதேச சரக்கு செலவுகள் அதிகரிப்பு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவை குறைவு காரணமாக பொம்மை தொழில் முடங்கிய நிலையில், லாயீப் வருகை பொம்மை தொழிலுக்கு உயிரோட்டத்தை அளித்துள்ளது.
FIFAவின் அசல் ஓவியத்தின் அடிப்படையில் எட்டு மாதிரி பொம்மை உள்ளிட்ட பொருட்கள் தயாராகி விற்பனைக்கு வந்துள்ளன. வணிக உரிமையாளர் சென் லீகாங் தனது குழு உலகெங்கிலும் உள்ள குறைந்தது 30 சப்ளையர்களை கொண்டுள்ளதாவும், ஏற்றுமதியாளர்களுக்கு இது முக்கியமானதொரு வெற்றி எனவும் கூறியுள்ளார்.