அபுதாபி-ஷாங்காய்-சென்னை இடையே சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் எதிஹாத் கார்கோ
அபுதாபி: இந்தியா-சீனா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க எதிஹாத் கார்கோ நிறுவனம் இன்று புதிய சேவையை தொடங்கவுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து சென்னை வழியாக அபுதாபிக்கு வாராந்திர 2 சேவைகள் இருக்கும். இதன் மூலம், எதிஹாத் கார்கோ இந்தியா மற்றும் சீனாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதிஹாத் ஏவியேஷன் குரூப் குளோபல் சேல்ஸ் அண்ட் கார்கோ மூத்த துணைத் தலைவர் மார்ட்டின் ட்ரூ கூறுகையில், இயந்திரங்கள், உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உலோகங்கள் போன்ற இந்திய தயாரிப்புகளுக்கு அதிகரித்துள்ள தேவையை பூர்த்தி செய்வதில் சென்னை சேவையை தனித்துவமாக்கும் என தெரிவித்தார்.