இழிவான கோஷம் - ஈக்வடார் கால்பந்து சங்கத்திற்கு எதிராக FIFA ஒழுங்கு நடவடிக்கை!

இழிவான கோஷம் - ஈக்வடார் கால்பந்து சங்கத்திற்கு எதிராக FIFA ஒழுங்கு நடவடிக்கை!

உலகக் கோப்பை கத்தார் 2022 இன் தொடக்க ஆட்டத்தின் போது ஈக்வடார் ரசிகர்கள் இழிவான வகையில் கோஷமிட்டதற்காக ஈக்வடார் கால்பந்து சங்கத்திற்கு எதிராக FIFA ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

“நவம்பர் 20 அன்று நடந்த கத்தார் மற்றும் ஈக்வடார் FIFA உலகக் கோப்பை போட்டியின் போது ஈக்வடார் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் FIFA ஒழுங்குமுறைக் குழு ஈக்வடார் கால்பந்து சங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோஷங்கள் எதைப் பற்றியது என்பதை FIFA வெளிப்படுத்தவில்லை; ஆனால், அது அதன் ஒழுங்குக் குறியீட்டின் 13 வது பிரிவின் கீழ் வருகிறது, இது “ஒரு நாடு, ஒரு நபர் அல்லது ஒரு குழுவின் கண்ணியம் அல்லது ஒருமைப்பாட்டைப் புண்படுத்தும், இழிவான, பாரபட்சமான அல்லது அவமதிக்கும் வார்த்தைகளால்” அமைந்தது என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கத்தார் உலகக் கோப்பையில் மேற்கொள்ளப்படும் முதல் ஒழுங்கு நடவடிக்கை இதுவாகும்.