துபாய் பாம் ஜூமைரா மோனோ ரயிலிலும் இனி நோல் (nol) கார்டைப் பயன்படுத்தி பயணிக்கலாம்!

துபாய் பாம் ஜூமைரா மோனோ ரயிலிலும் இனி நோல் (nol) கார்டைப் பயன்படுத்தி பயணிக்கலாம்!

துபாய்: துபாய் பாம் ஜூமைராவுக்கு செல்பவர்கள் இனி ஆர்.டி.ஏ. (RTA)வின் நோல் (nol) கார்டைப் பயன்படுத்தி மோனோரயிலில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சேவைகளை அணுக இப்போது nol ஐப் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

நோல் (nol) கார்டானது பயனர்கள் பல்வேறு RTA போக்குவரத்து சேவைகளை அணுக உதவுகிறது. இது மெட்ரோ, பேருந்துகள், டிராம் மற்றும் கடல் போக்குவரத்து வழிகளான வாட்டர் டாக்ஸி மற்றும் வாட்டர் பஸ் மற்றும் பொது பார்க்கிங் ஸ்லாட்டுகளின் கட்டணத்தை செலுத்த பயன்படுகிறது. மேலும் துபாய் முனிசிபாலிட்டியின் பொதுப் பூங்காக்கள் மற்றும் எதிஹாட் அருங்காட்சியகத்திற்கான நுழைவுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் இந்த கார்டினைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனுமதி மூலம், பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளை ஒருங்கிணைக்க உதவுகிறது என்றும், துபாய் முழுவதும் பயணிகளுக்கு தடையற்ற பயணங்களை வழங்குகிறது என்றும் கார்ப்பரேட் டெக்னாலஜி சப்போர்ட் சர்வீசஸ் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது யூசுப் அல் முதர்ரெப் குறிப்பிட்டுள்ளார்.