உலகக் கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா!
தோஹா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டிணா. 2014ல் கை நழுவிப் போன சாம்பியன் பட்டம், 2022ல் மெஸ்சியின் கைக்கு வந்துள்ளது. பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. கூடுதல் நேரத்தில் ஆட்டம் 3-3 என சமநிலையில் இருந்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை அர்ஜென்டினா வெற்றிவாகை சூடியது.