கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாட்டத்தின் திருவிழா தலமாக காட்சியளிக்கும் துபாய் குளோபல் வில்லேஜ்!

கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாட்டத்தின் திருவிழா தலமாக காட்சியளிக்கும் துபாய் குளோபல் வில்லேஜ்!

துபாய்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் திருவிழா தலமாக துபாய் குளோபல் வில்லேஜ் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 8, 2023 வரை குளோபல் வில்லேஜில் முழு கொண்டாட்டங்கள் நடைபெறும். உணவு, பொழுதுபோக்கு மட்டுமின்றி கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடவும், உலக நாடுகளின் கலை, கலாசார நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும், கற்கவும் வாய்ப்பு உள்ளது. பார்வையாளர்கள் பல்வேறு நிகழ்வுகளுடன் ஒரு குளிர்கால அதிசயம் நடத்தப்படும்.

குளோபல் வில்லேஜ் அதிகாரிகள் சாண்டா மற்றும் அவரது நண்பர்களுடன் ஆண்டின் மிக அற்புதமான நேரத்தை இங்கே கொண்டாடலாம் என்று கூறுகின்றனர்.

21 மீட்டர் உயரமுள்ள குளோபல் வில்லேஜ் பண்டிகை மரம், உலகம் முழுவதும் உள்ள கலாச்சாரங்களைக் கொண்டாடும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த குடும்ப புகைப்பட வாய்ப்புடன் கூடிய மகிழ்ச்சியான இடமாகும். இந்த சீசன் கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக இம்மரம் உள்ளது.

பார்வையாளர்கள் இம்மாதம் 30ஆம் தேதி வரை குளோபல் வில்லேஜில் சாண்டாவை சந்திக்கலாம். இங்கு தினமும் 5 சந்திப்பு மற்றும் வாழ்த்து அமர்வுகள் நடைபெறுகின்றன. இந்த சாகசத்தில் சான்டாவுடன் இணைந்து கொண்ட 1,000 குட்டி சாண்டாக்கள் விடுமுறை உணர்வைக் கொண்டு வருகிறார்கள். அவை சில சமயங்களில் குலோபல் வில்லேஜ் முழுவதும் மிகவும் எதிர்பாராத இடங்களில் காணப்படுகின்றன.

குமிழி வடிவ கியோஸ்க்குகள் பண்டிகை ஷாப்பிங்கிற்காக வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தொடர்பான பொருட்களை இங்கிருந்து வாங்கலாம்.