அபுதாபி பிக் டிக்கெட்டில் 2 கோடி வென்ற இந்தியர்!
அபுதாபி: பலரின் வாழ்க்கையை மாற்றிய அபுதாபி பிக் டிக்கெட்டின் மூன்றாவது வாராந்திர இ-டிராவில் வெளிநாடு வாழ் இந்தியர் ஹரி ஜெயராம் 10 லட்சம் திர்ஹம் (2 கோடி இந்திய ரூபாய்) வென்றார்.
துபாயில் வசிக்கும் ஹரி, கடந்த எட்டு ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கிறார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் மூலம் பிக் டிக்கெட் பற்றி தெரிந்து, இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒன்றரை வருடங்களாக பிக் டிக்கெட் வாங்கியுள்ளார். பிக் டிக்கெட் பிரதிநிதிகள் பரிசு பற்றித் தெரிவிக்க அழைத்தபோது ஹரியால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. இந்த பரிசு மட்டுமல்லாது அவர் 30 மில்லியன் திர்ஹம்ஸ் பெரும் மாதாந்திர டிராவிலும் பன்கெடுக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
30 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வெல்லும் நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர டிரா டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும்.
டிக்கெட்டுகளை பிக் டிக்கெட் இணையதளத்தில் இருந்தும் www.bigticket.ae அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல்-ஐன் விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் ஸ்டோர் கவுண்டர்கள் மூலமாகவும் வாங்கலாம்.
பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் போட்டியை நேரலையில் காணலாம்.
பிக் டிக்கெட் பற்றிய சமீபத்திய தகவலுக்கு, பிக் டிக்கெட்டின் சமூக ஊடக தளங்கள் மற்றும் இணையதளத்தைப் பார்வையிடவும்.