ஓடுபாதை குறுக்கே வந்த தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதல்! - 2 பேர் பலி

ஓடுபாதை குறுக்கே வந்த தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதல்! - 2 பேர் பலி

லிமா: பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தில் உயர பறப்பதற்கு முன்னால் ஒடுபாதையில் வேகமாக வந்த விமானம் ஒடுபாதையின் குறுக்கே வந்த  தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர விபத்து வெள்ளிக்கிழமை நடந்தது. 

லாதம் ஏர்லைன்ஸ் விமானம் LA-2213 102 பயணிகளுடன் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. ஓடுபாதையில் விமானம் அதிவேகமாக முன்னோக்கி நகர்ந்த அதே நேரத்தில், சிசிடிவி காட்சிகளில் சில தீயணைப்பு வாகனங்கள் ஓடுபாதையைக் கடப்பதைக் காணமுடிகிறது. ஆபத்தைக் கண்டு, விமானிகள் புறப்படுவதை கைவிட்டனர், ஆனால், விமானம் ஓடுபாதையில் முன்னோக்கி நகர்ந்து, தீயணைப்பு வாகனத்தில் வேகமாக மோதியது.