அமீரகத்தில் தீபாவளியை முன்னிட்டு விடுமுறையை அறிவித்த பள்ளிகள்!

அமீரகத்தில் தீபாவளியை முன்னிட்டு  விடுமுறையை அறிவித்த பள்ளிகள்!

தீபாவளியை முன்னிட்டு துபாயில் உள்ள பல பள்ளிகள் இரண்டு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தீபாவளி பண்டிகையை தங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியோடு வீட்டில் கொண்டாடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த விடுமுறை நாட்களானது திங்கள் மற்றும் செவ்வாய் (அக்டோபர் 24-25) ஆகிய இரு நாட்களாகும். சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்தால், இந்தப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.