குவைத் பல்கலைக்கழகம் புதிய கல்வியாண்டில் வெளிநாட்டு மாணவர்களை ஏற்றுக்கொள்ளாது!
குவைத் சிட்டி: புதிய கல்வியாண்டில் வெளிநாட்டு மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என குவைத் பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் பதிவு டீன் அப்துல்லா அல் ஹஜ்ரி தெரிவித்துள்ளார்.
குவைத் மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2023-24 கல்வியாண்டிற்கான இரண்டாவது பதிவு காலத்தில் வெளிநாட்டு மாணவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என அப்துல்லா அல் ஹஜ்ரி தெரிவித்தார்.
விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் உயர்நிலைப் பள்ளி தரச் சான்றிதழில் குறைந்தபட்சம் 90 சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ளன. நுழைவு அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்த பிறகு எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்தார்.