குவைத்: கோவிட் சூழல் காரணமாக விசா நடைமுறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு முடிவு!

குவைத்: கோவிட் சூழல் காரணமாக விசா நடைமுறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு முடிவு!

குவைத் சிட்டி: கோவிட் சூழலில், விசா நடைமுறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே இருக்கும் வெளிநாட்டவர்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன் திரும்ப வேண்டும் என்று குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட விதிவிலக்கை குவைத் திரும்பப் பெறுகிறது. 

ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன்னர் நாட்டிற்குள் பிரவேசிக்காதவர்களின் குடியிருப்பு அனுமதிகள் தானாகவே இரத்துச் செய்யப்படும் என அதிகாரிகளை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.