குவைத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 இந்தியர் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

குவைத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 இந்தியர் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

குவைத் சிட்டி: குவைத்தில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் 2 இந்தியர் உள்பட 3 வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

1990 இல் ஈராக் படையெடுப்பின் போது பதிக்கப்பட்ட கண்ணிவெடி தற்போது வெடித்ததில் இந்தியர் ஒருவர் இறந்ததாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் அல் ஜஹ்ராவில் சாலையை கடக்கும் போது, ​​வேகமாக வந்த வாகனம் மோதி மற்றொரு இந்தியர் உயிரிழந்தார்.

கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த எகிப்தியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.