குவைத் மொபைல் ஆப்ஸில் அஃபியா கார்டு அப்டேட்!

குவைத் மொபைல் ஆப்ஸில் அஃபியா கார்டு அப்டேட்!

குவைத்தில் உள்ள சிவில் ஐடியின் டிஜிட்டல் பதிப்பான குவைத் மொபைல் ஐடி செயலியில் டிஜிட்டல் அஃபியா கார்டு தகவலைச் சேர்க்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சேவைகளை மேலும் டிஜிட்டல் மயமாக்கும் ஒரு பகுதியாக இந்த செயலியில் மேலும் பல சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய அப்டேட் மூலம், கிளினிக்குகள் மற்றும் சுகாதார சேவை மையங்கள் அஃபியா கார்டுக்குப் பதிலாக குவைத் மொபைல் ஐடியை ஏற்கும்.

ஓட்டுனர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், வாகனப் பதிவு, கோவிட் தடுப்பூசி சான்றிதழ், குடும்ப விசா தகவல்கள் போன்றவற்றின் டிஜிட்டல் பதிப்புகள் ஒரே தளத்தில் கிடைக்கும். மேலும், பரிவர்த்தனைகளை எளிதாக்கவும், ஆவணம் இழப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கவும் இது உதவும். 

சிவில் தகவல் அதிகார சபையின் கணினி வலையமைப்புடன் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சுக்களை இணைத்து இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.