குவைத்தில் 10 மாதத்தில் 47,000 பயண தடை உத்தரவுகள்!

குவைத்தில் 10 மாதத்தில் 47,000 பயண தடை உத்தரவுகள்!

குவைத் சிட்டி: குவைத்தில் பத்து மாதங்களில் 47,000க்கும் மேற்பட்ட பயண தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரை குவைத் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டினர் மீது 47,512 பயணத் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை நீதி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பயணத் தடைகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இது 30,689 ஆக இருந்தது. குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 34 லட்சம் பேர் வெளிநாட்டினர். குவைத்தின் மொத்த மக்கள் தொகை 46 லட்சம்.