குவைத்தில் அனைவருக்கும் அவசரநிலை சிகிச்சைகள் அனைத்தும் இலவசம்..!

குவைத்தில் அனைவருக்கும் அவசரநிலை சிகிச்சைகள் அனைத்தும் இலவசம்..!

குவைத்தில் அவசர காலங்களில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் முறையான நெறிமுறைகள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகள், இதய வடிகுழாய் சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசரகால சந்தர்ப்பங்களில், அனைத்து நோயாளிகளின் உயிரையும் காப்பாற்ற முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், நெறிமுறை அம்சத்திற்கு முன்னுரிமை அளித்து, பாரபட்சமின்றி சிகிச்சை தொடர்வதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.