ராஸ் அல் கைமாவில் பதிவை புதுப்பிக்காத வாகனங்களை படம்பிடிக்கும் சிறப்பு கேமரா!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல் கைமாவில் பதிவை புதுப்பிக்காத வாகனங்களையும் சாலையோர கேமராக்கள் பிடிக்கும். இதற்காக அமீரகத்தின் சாலைகளில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக ராசல் கைமா காவல்துறை தெரிவித்துள்ளது.
காலாவதியாகும் 40 நாட்களுக்கு முன் நம்பர் பிளேட் மற்றும் இன்சூரன்ஸை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது சட்டம். பதிவு செய்யப்படாத வாகனங்கள் சாலையில் பயணித்தால் 500 திர்ஹம் அபராதமும் நான்கு கருப்பு புள்ளிகளும் விதிக்கப்படும். அபராதம் செலுத்தி 14 நாட்களுக்குப் பிறகும் தங்கள் பதிவை புதுப்பிக்கவில்லை என்றால், அவர்கள் மீண்டும் அபராதம் செலுத்த வேண்டும். 90 நாட்களுக்குப் பிறகும் புதுப்பித்தல் செயல்முறை முடிக்கப்படாவிட்டால், வாகனங்கள் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்றும் ராசல் கைமா போலீசார் தெரிவித்தனர். பதிவை புதுப்பிக்காத வாகனங்களை பிடிக்க பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் வீடியோ படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.