அமீரகத்தில் பிளாஸ்டிக் பைகள், பொருட்களுக்கு முழு தடை..! - விவரம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த ஆண்டு முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்படும். ஜனவரி 1, 2024 முதல் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும். 2026ல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்வேறு எமிரேட்டுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை படிப்படியாக நிறுத்துகின்றன. எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு பூரண தடை விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்தகைய பைகளின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விநியோகம் தடை செய்யப்படும். ஜனவரி 1, 2026 முதல், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கோப்பைகள், தட்டுகள், கொள்கலன்கள், பெட்டிகள், கட்லரிகள் போன்றவை தடை செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அபுதாபியில் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. துபாயில் இதுபோன்ற பைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வணிக நிறுவனங்கள் 25 ஃபில்ஸ் வசூலிக்கின்றன.