அபுதாபி: குடியிருப்புகளில் அதிக எண்ணிக்கையில் தங்கியிருந்தால் ஒரு மில்லியன் அபராதம்!

அபுதாபி: குடியிருப்புகளில் அதிக எண்ணிக்கையில் தங்கியிருந்தால் ஒரு மில்லியன் அபராதம்!

அபுதாபி: அடுக்குமாடி குடியிருப்புகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் குடியிருப்போர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அடுத்த ஆண்டு விரிவான சோதனை தொடங்கும் எனவும், மீறுபவர்களுக்கு ஒரு மில்லியன் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

‘Your Home, Your Responsibility’ ‘உங்கள் வீடு, உங்கள் பொறுப்பு’ என்ற பிரச்சாரத்தை தொடங்கிவைத்த அபுதாபி நகராட்சி மற்றும் போக்குவரத்து துறை குடியிருப்புகளுக்கு இதுதொடர்பாக  எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நகர குடியிருப்புகள் ஆய்வு செய்யப்படும் என்றும் மீறுபவர்களுக்கு பெரும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட குடியிருப்புகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களின் அதிகமான எண்ணிக்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அறைகளை வாடகைக்கு எடுப்பவர்கள் மற்றவர்களுக்கு சட்ட விரோதமாக தங்குமிடத்தை ஏற்பாடு செய்ய அனுமதியில்லை.

அபுதாபி சிவில் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம். குடியிருப்புகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்களை அனுமதிக்கக் கூடாது என குடியிருப்போர் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அபுதாபியில் உள்ள பல்வேறு நகராட்சிகளின் கீழ் இந்த ஆய்வு பிரச்சாரம் நடத்தப்படும்.