மோசமான வானிலை காரணமாக துபாய் குளோபல் வில்லேஜ் இன்றுமூடல்..!
துபாயில் நிலவும் மோசமான வானிலை காரணமாக துபாய் குளோபல் வில்லேஜ் இன்று (ஜன.07) மூடப்படுவதாக அதன் நிர்வாகக் குழு ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இன்று தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம் போல் மாலை 4 மணி முதல் செயல்படத் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Global_Village closed today due to unstable weather.#UAE_BARQ_EN pic.twitter.com/sbKnG5TQbX
— UAE BARQ (@UAE_BARQ_EN) January 7, 2023