எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கட்டுப்பாடு!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கட்டுப்பாடு!

துபாயின் எமிரேட்ஸ் (Emirates) ஏர்லைன்ஸ் பயணிகள் எலக்ட்ரானிக் சாதனங்களைக் கொண்டு செல்வதற்கான புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

புதிய வழிமுறையின்படி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் 15க்கும் மேற்பட்ட மின்னணு எலக்ட்ரானிக் சாதனங்களை ஒரே நேரத்தில்  எடுத்துச் செல்லவோ அல்லது செக்-இன் செய்யவோ கூடாது அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், எலக்ட்ரானிக் பொருட்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பேக்கேஜ் செய்யப்பட வேண்டும். அதன் மீது டேப் ஒட்டவோ அல்லது மற்றொரு எலக்ட்ரானிக் பொருளுடன் இணைத்து பேக்கேஜ் செய்யவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக, மோசமான முறையில் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி எடுத்துச் செல்லும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, லித்தியம் உலோகம் உள்ளிட்ட பேட்டரிகள், மற்றும் பவர் பேங்க்கள் போன்ற சாதனங்களின் பேட்டரிகள் ஷார்ட் சர்க்யூட் ஆவதை தவிர்க்க தனித்தனியாக அவை பேக்கேஜ் செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, பாதுகாப்பு காரணங்களுக்காக, ஹோவர்போர்டுகள், மினி-செக்வேஸ் மற்றும் ஸ்மார்ட் அல்லது சுய சமநிலை சக்கரங்கள் (self-balancing wheels) போன்ற தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் வாகனங்கள் பேட்டரியுடன் இருந்தாலும் அல்லது பேட்டரி இல்லாவிட்டாலும் எடுத்துச் செல்வதையும், செக்-இன் செய்வதையும் தடை செய்கிறது.

லித்தியம் உலோகம் உள்ளிட்ட பேட்டரிகள், மற்றும் பவர் பேங்க்கள், எடுத்துச் செல்லக்கூடிய எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான பேக்கேஜில் மட்டுமே பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த பேட்டரிகள் ஷார்ட் சர்க்யூட்டைத் தவிர்க்க தனித்தனியாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

பயணிகள் ட்ரோன்களை கேபின் சாமான்களாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் அவை சரிபார்க்கப்பட்ட சாமான்களாக ஏற்றுக்கொள்ளப்படலாம். கூடுதலாக, பயணிகள் ட்ரோனுக்கான லித்தியம் பேட்டரிகளைப் பாதுகாக்கும் வகையில் பேட்டரிகளை அகற்றி, கேபின் பேக்கேஜில் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் எனவும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.