தொழிலாளர்களுக்கு உரிய இடவசதியை வழங்காவிட்டால் நிறுவனங்களின் பணி அனுமதி ரத்து செய்யப்படும்! - யுஏஇ எச்சரிக்கை

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய இடவசதியை வழங்காவிட்டால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரக மனிதவள மற்றும் உள்நாட்டு மயமாக்கல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய நிறுவனங்களின் பணி அனுமதி ரத்து செய்யப்படும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தேவையான இடவசதி கிடைக்கும் வரை இடைநீக்கம் தொடரும் என தெரிவித்துள்ளது.