சவுதியில் நவம்பரில் மட்டும் சட்டவிரோத வெளிநாட்டவர்கள் 14,133 பேர் கைது!

சவுதியில் நவம்பரில் மட்டும் சட்டவிரோத வெளிநாட்டவர்கள் 14,133 பேர் கைது!

ரியாத்: சவுதி அரேபியாவில் பல்வேறு மாகாணங்களில் பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் 14,000க்கும் மேற்பட்ட சட்டத்தை மீறியவர்கள் சிக்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  நவம்பர் 24 முதல் 30 வரை 8,148 இகாமா சட்டத்தை மீறுபவர்கள், 3,859 அத்துமீறல்கள் மற்றும் 2,126 தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்கள் உட்பட மொத்தம் 14,133 சட்டத்தை மீறியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதன்போது எல்லைகள் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற 377 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல்  எல்லை வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 40 பேர் ஒரே வாரத்தில் பாதுகாப்புத் துறையினரால் பிடிபட்டனர்.  

இகாமாவுக்கு வேலை, தங்குமிடம் மற்றும் பயண வசதிகளை வழங்கிய ஒன்பது பேரையும், தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்கள் மற்றும் ஊடுருவல்காரர்களையும் பாதுகாப்புத் துறையினர் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஒருவர் நாட்டிற்குள் நுழைவதை எளிதாக்குவது அல்லது அவருக்கு போக்குவரத்து, தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி அல்லது சேவையை வழங்கினால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.  மேலும், அவர்கள் மீது ஒரு மில்லியன் ரியால் அபராதம், வாகனங்கள், தங்கியிருந்த இடத்தை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், உள்ளூர் ஊடகங்களில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.