குவைத்தில் 7 சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
குவைத் சிட்டி: குவைத்தில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
காலித் முகமது கஹ்தானி, அலி ஜாபிரி, ரபாப் முஸ்தபா ஷஹ்லானி, மிஷான் முஹம்மது முத்தலாக் (குவைத்), ரஷித் அகமது மஹ்மூத் (பாகிஸ்தான்), ஹமத் அகமது மஹ்மூத் (சிரியா), ஆயிஷா நெமோ (எத்தியோப்பியா) ஆகியோர் குவைத் மத்திய சிறையில் நேற்று தூக்கிலிடப்பட்டனர்.
குவைத்தில் கடைசியாக 2017ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தற்போது தான் ஒரே நேரத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.