சவுதி சுகாதார அமைச்சகத்தில் செவிலியர் பணி காலியிடங்களுக்கு NORCA ROOTS மூலம் விண்ணப்பிக்கலாம்

சவுதி சுகாதார அமைச்சகத்தில் செவிலியர் பணி காலியிடங்களுக்கு NORCA ROOTS மூலம் விண்ணப்பிக்கலாம்

திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகத்தில் (MoH) பெண் செவிலியர் பணியிடங்களுக்கு NORKA ROOTS மூலம் விண்ணப்பிக்கலாம். நர்சிங்கில் B.Sc/ Post B.Sc/ M.Sc/ Ph.D ஆகிய கல்வித் தகுதியுடன் குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கார்டியாலஜி / ER/ ICU/ NICU/ ONCOLOGY/ OT (OR)/ PICU/ மாற்று சிகிச்சை துறைகளுக்கான ஆட்சேர்ப்பும் நடைபெறுகிறது. 

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Norka Roots இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.norkaroots.org இல் வழங்கப்பட்ட இணைப்பு (https://forms.gle/mBi7ink29sbhv9wE9) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 35 ஆண்டுகள். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 12 டிசம்பர் 2022 ஆகும்.

  • சவூதி சுகாதார அமைச்சகத்தின் படி சம்பளம், தங்குமிடம், உணவு, விசா மற்றும் டிக்கெட்டுகளும் இலவசம். 
  • பணிக்கான நேர்காணல் 2022 டிசம்பர் 20 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடைபெறும். 
  • நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக ஹைதராபாத் சென்றடைய வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, நேர்காணலின் தேதி மற்றும் இடம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவலுக்கு, 24 மணி நேரமும் திறந்திருக்கும் நோர்கா ரூட்ஸ் குளோபல் தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும். 

தொலைபேசி எண் 1800 425 3939 (இந்தியாவில் இருந்து +91- 8802 012345)