துபாயில் தீபாவளியை முன்னிட்டு மெகா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அறிவிப்பு..!

துபாயில் தீபாவளியை முன்னிட்டு மெகா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அறிவிப்பு..!

துபாயில் தீபாவளியை முன்னிட்டு 10 நாட்களுக்கு கோலாகலமாக சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, துபாயில் வசிப்பவர்கள் பல்வேறு அரசு மற்றும் கார்ப்பரேட் அமைப்புகளின் பங்கேற்புடன் தீபாவளியை மிகப் பெரிய அளவில் கொண்டாடவிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

10 நாட்கள் நீடிக்கும் விழாக்களில் நேரடி கலாச்சார நிகழ்ச்சிகள், வானவேடிக்கை காட்சிகள் நடைபெற இருக்கின்றன. மேலும், கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஒரு வருட காலத்திற்கு வாடகையில்லா அடுக்குமாடி குடியிருப்பை வெல்லும் வாய்ப்பு மற்றும் 10 அதிர்ஷ்டசாலிகள் 50 கிராம் தங்க காயின் வெல்லும் ரேஃபிள் டிராக்கள் நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது. 

இந்த மெகா தீபாவளி கொண்டாட்டத்தின் விவரங்களை இந்திய தூதரகம் மற்றும் துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அல் சீஃப் ஹெரிடேஜ் பகுதியில் வெளியிட்டுள்ளனர்.

துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவன (DFRE) சில்லறைப் பதிவு இயக்குநர் முகமது ஃபெராஸ் கூறுகையில்: "எங்கள் நகரத்தின் பன்முகத்தன்மையைக் குறிக்கும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களுக்காக இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். துபாயில் இந்த ஆண்டு தீபாவளியின் போது அற்புதமான சலுகைகள், ரேஃபிள் டிராக்கள், கண்கவர் நேரடி பொழுதுபோக்கு, வானவேடிக்கைகள் மற்றும் பல கண்கவர் நிகழ்வுகள் அக்டோபர் 28 வரை நுபாய் எமிரேட் முழுவதும் நடைபெறும்" என கூறியுள்ளார்.

“துபை ஃபெஸ்டிவல் பிளாசா, சிட்டி சென்டர் தேரா, புர்ஜூமான் மால், ஓயாசிஸ் மால் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி உள்ளிட்ட பல்வேறு ஷாப்பிங் மால்கள் மற்றும் இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சிட்டி சென்டர்களில், அக்டோபர் 14 முதல் நிகழ்ச்சிகள். ரங்கோலி போட்டிகள் நடைபெறும். 300 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் தங்க நாணயங்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். புர் ஜுமானில், நேரடி பொழுதுபோக்கு, பஜார் பேஷன் ஷோக்கள் மற்றும் பல நடைபெறவுள்ளன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

கூடுதலாக, ஒரு வருட காலத்திற்கு வாடகை இல்லாத ஒரு அறை ஹால் கிச்சன் அபார்ட்மெண்ட்டை வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது என கூறப்பட்டுள்ளது. வானவேடிக்கைகளைப் பொறுத்தவரை. ஃபெஸ்டிவல் சிட்டியில் water and ight imagine show நடைபெற உள்ளது. அக்டோபர் 23 அன்று இரவு 8.30 மணிக்கு துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் கண்கவர் வான வேடிக்கை நிகழ்வுடன் இது ஒத்திசைக்கப்பட்டுள்ளது.

குளோபல் வில்லேஜிலும் தீபாவளியைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். தீபாவளி மார்க்கெட்டுகளில் பார்வையாளர்கள் தனித்துவமான கைவினைப் பொருட்கள், வெள்ளிப் பொருட்கள், தீபாவளிக்கு ஏற்ற அலங்காரப் பொருட்கள் மற்றும் வண்ணமயமான இந்திய ஆடைகள் மற்றும் பல இந்திய சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றை வாங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.