மக்கா-மதீனா ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் சவுதி பெண்கள்..!

மக்கா-மதீனா ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் சவுதி பெண்கள்..!
மக்கா-மதீனா ஹரமைன் ரயில் உலகின் அதிவேக ரயில்களில் ஒன்றாகும். இந்த அதிவேக ரயிலை சவுதி பெண்கள் இயக்க ஆரம்பித்துள்ளனர். பெண்கள் ரயில்களை இயக்குவது மற்றும் டிரைவிங் கேபினில் அமர்ந்து பயிற்சி பெறும் வீடியோவை சவுதி ரயில்வே வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ கிளிப்பின் படி, சவூதி பெண்கள் ரயிலில் தங்கள் பணிகளைச் செய்வதில் மும்முரமாக இருப்பதைக் காணலாம். அதிவேக ரயில்களை ஓட்டும் பயிற்சியை 31 பழங்குடி பெண்கள் முடித்துள்ளதாக சவுதி ரயில்வே தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அதிவேக ரயிலை இயக்கும் பெருமையை நானும், எனது சக ஊழியர்களும் முதன்முதலில் பெற்றுள்ளதை எண்ணி பெருமைப்படுவதாக சவுதி பெண் சாரா அல் ஷெஹ்ரி கூறியுள்ளார்.
இது மிகவும் பொறுப்பான வேலை என்று பயிற்சி முடித்த மற்றொரு சவுதி பெண் நூரா ஹிஷாம் கூறுகிறார். ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பு ஹரமைன் எக்ஸ்பிரஸ் டிரைவரின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.