தோஹா ஆஸ்பயர் பார்க்கில் காட்சிக்கு வைக்கப்படும் ‘ஃபிஃபா உலகக் கோப்பை-2022’

தோஹா ஆஸ்பயர் பார்க்கில் காட்சிக்கு வைக்கப்படும் ‘ஃபிஃபா உலகக் கோப்பை-2022’

தோஹாவில் உள்ள ஆஸ்பயர் பார்க்கில் இன்று நடைபெறும் சிறப்பு விழாவில் ஃபிஃபா உலகக் கோப்பை காட்சிப்படுத்தப்பட உள்ளது. கோப்பை கண்காட்சி மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வை பிரபல உள்ளூர் நகைச்சுவை நடிகர் ஹமத் அல் அமரி தொகுத்து வழங்குவார்.

இந்த கோப்பை வரும் நாட்களில் பல்வேறு வணிக மையங்கள் மற்றும் நிறுவனங்களில் சுற்றுப்பயணம் செய்யப்படும். உலகக் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெற்றியாளர்களுக்கான கோப்பையை ரசிகர்கள் வெகு அருகில் பார்க்க இதுவே கடைசி வாரமாகும்.

இந்த உலகக் கோப்பையானது போட்டியில் கலந்துகொள்ளும் 32 நாடுகள் உட்பட 51 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தோஹா வந்தடைந்துள்ளது.