தோஹாவுக்கு ஆறு விமானங்களை திட்டமிட்டிருக்கும் ஏர் இந்தியா 

தோஹாவுக்கு ஆறு விமானங்களை திட்டமிட்டிருக்கும் ஏர் இந்தியா 
Air India to Doha

அக்டோபர் 30 முதல் செயல் படும் வகையில் ஆறு விமானங்களை தோஹாவுக்கு அனுப்ப ஏர் இந்தியா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவிற்க்காக தோஹா- மும்பை வழித்தடம் உருவாக்கப்பட்டு செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விமான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

வரும் அக்டோபர் 30 ல் டோஹாவிலிருந்து மும்பைக்கு நேரடி விமானம் 12 :45 க்கு  புறப்பட்டு மாலை 6 .45 க்கு முபை விமான நிலையத்தை வந்தடையும் என்றும் இதற்கான டிக்கட் விலை 920 ரியால்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

விமான நிறுவனத்தின் இணையதளத்தில் மார்ச் 19 2023 வரையிலும் இதற்கான டிக்கட் முன்பதிவுகள் காட்டப்பட்டுள்ளது 
 இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையில் மேலும் ஆறு விமானங்களை இயக்கவும் அவை டெல்லி மட்டும் மும்பை விமான நிலையங்களை இணைக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் ஏர் இந்தியா நிறுவனம் கொல்கத்தா மும்பை மற்றும் டெல்லி துபாய் வழியாக இயங்கும் வகையில் நான்கு விமானங்களை திட்டமிட்டுள்ளதாகவும் இவை நவம்பரில் நடைபெற இருக்கும் ஃபிபா உலக கோப்பை விளையாட்டு போட்டிகளை மையப்படுத்தி இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் துபாய் மற்றும் தோகாவிற்க்குஅதிக பயணிகளை சுமந்து செல்வதை இலக்காக கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது