கின்னஸில் இடம் பிடித்த கத்தாரின் 'கால்பந்து கொடி'

கின்னஸில் இடம் பிடித்த கத்தாரின் 'கால்பந்து கொடி'

தோஹா:  கால்பந்தால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய கொடி என்ற கின்னஸ் உலக சாதனையை கத்தார் படைத்துள்ளது. தோஹா ஃபெஸ்டிவல் சிட்டியில் புதிதாக திறக்கப்பட்ட அரங்கில் கத்தார் இஸ்லாமிய வங்கி (QIB) உலகின் மிகப்பெரிய கால்பந்து கொடியை நிறுவியுள்ளது.

தோஹா ஃபெஸ்டிவல் சிட்டியில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை மற்றும் நிகழ்வுகளின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்தகைய சாதனை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கொடி 11 மீட்டர் நீளமும் 28 மீட்டர் அகலமும் கொண்டது. கத்தாரின் தேசியக் கொடியின் நிறங்களைப் பிரதிபலிக்கும் வகையில், 6,000 மெரூன் மற்றும் வெள்ளை நிற கால்பந்துகள் கொடியை உருவாக்க பயன்படுத்தப்பட்டன.

சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான விசா மற்றும் தோஹா ஃபெஸ்டிவல் சிட்டி ஆகியவற்றுடன் இணைந்து கத்தார் இஸ்லாமிய வங்கி QIB இத்தகைய குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. விழா நகர அரங்கில் விருந்தினர்கள் மற்றும் கால்பந்து ஆர்வலர்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறையை QIB திறந்துள்ளது.

இது டிசம்பர் 18 வரை தினமும் திறந்திருக்கும். போட்டிகளை நேரலையில் காண பிரத்யேக ஓய்வறைக்கு வெளியே 3 மெகா திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கத்தார் இஸ்லாமிய வங்கி QIB விசா கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அழைப்பின் மூலம் அறைக்கான அனுமதி கிடைக்கும்.