உலகின் ஏழு அதிசயங்களில் இடம்பிடித்த சவுதியின் அல்உலா பாரம்பரிய நகரம்!
வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள அல்உலா என்ற பாரம்பரிய நகரமானது 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் ஏழு அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை விருது பெற்ற பயண எழுத்தாளர் ஆரோன் மில்லர் தொகுத்துள்ளார்.
அல்உலா ஒரு அசாதாரண வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் கொண்ட இடமாகும். இருப்பினும், சமீப காலம் வரை அரேபியாவிற்கு வெளியே மிகக் குறைவானவர்களே இந்த இடத்தைப் பற்றி அறிந்திருந்தனர் அல்லது இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
மில்லரின் கூற்றுப்படி, இந்த தளம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் பார்வையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டபோது, அது 200,000 ஆண்டுகள் பழமையான அரேபிய வரலாற்றை வெளிக்கொணர்ந்தது.
சவூதி அரேபியாவின் வடமேற்கு பாலைவனத்தின் மையப்பகுதியில் அல்உலா அமைந்துள்ளது, இதில் பெரும்பாலானவை இன்னும் ஆராயப்படவில்லை. 5 சதவீதத்திற்கும் குறைவான இடமே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் அசல் ஏழு அதிசயங்களில், ஒன்று மட்டுமே - கிசாவின் பெரிய பிரமிடுகள் - இன்னும் உள்ளது.
பாபிலோனின் தொங்கும் தோட்டம், அலெக்ஸாண்டிரியாவின் கலங்கரை விளக்கம், ஆர்ட்டெமிஸ் கோயில், ரோட்ஸின் கொலோசஸ், ஒலிம்பியாவில் ஜீயஸ் சிலை மற்றும் ஹாலிகார்னாசஸில் உள்ள கல்லறை அனைத்தும் தூசிபடிந்து மங்கிவிட்டன. எனவே, மில்லர் ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏழு புதிய அதிசயங்களை பட்டியலிட முடிவு செய்தார். அந்த பட்டியலில் தான் சவுதியின் அல்உலா பாரம்பரிய நகரம் இடம்பிடித்துள்ளது.
இதனையும் படியுங்கள்.. தைமா, அல்-உலா, கெய்பர், ஹதாஜ் கிணறு - பாரம்பரியங்களை மீட்டெடுக்கும் திருவிழா!