சவுதியில் ஆபாச வீடியோ கிளிப்பை சமூக வலைதளங்களில் பரப்பிய ஒரு பெண் உட்பட 4 பேர் கைது!
ரியாத்: சவுதி அரேபியாவில், ஆபாச வீடியோவை படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய 4 பேர் ரியாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் இளம் வெளிநாட்டுப் பெண், நைஜீரிய இளைஞன் மற்றும் இரண்டு சவூதி பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது கலாச்சாரத்திற்கு மாறான காட்சிகளை படமாக்கி சமூக வலைதளங்கள் மூலம் பரப்பியதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என சவுதி அரேபிய பொது பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், வழக்கு அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.