சவூதிக்கு டிக்கெட் எடுத்தால் விசா இலவசம்! - சலுகையை அறிவித்த சவூதி ஏர்லைன்ஸ்

சவூதி ஏர்லைன்ஸின் சலுகை ‘Your Ticket is a Visa’ என்று அழைக்கப்படுகிறது. இந்த விசா சவூதி அரேபியாவில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) செலவிட அனுமதிக்கும். இந்த நேரத்தில் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம், உம்ரா செய்யலாம்.

சவூதிக்கு டிக்கெட் எடுத்தால்  விசா இலவசம்! - சலுகையை அறிவித்த சவூதி ஏர்லைன்ஸ்

டிக்கெட் வாங்கும் போது இலவச சுற்றுலா விசாவையும் வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று சவுதி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ஷஹ்ரானி தெரிவித்தார். டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி ஏர்லைன்ஸின் சலுகை ‘Your Ticket is a Visa’ என்று அழைக்கப்படுகிறது. இந்த விசா சவூதி அரேபியாவில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) செலவிட அனுமதிக்கும். இந்த நேரத்தில் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம், உம்ரா செய்யலாம்.

சுற்றுலா மற்றும் உம்ரா யாத்திரைக்காக சவூதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு இந்த புதிய சேவை பெரும் பயனளிக்கும். சவுதி ஏர்லைன்ஸின் புதிய டிக்கெட் முறையில், பயணிகள் டிக்கெட் முன்பதிவுடன் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். டிக்கெட் புக் செய்யும் போது விசா தேவையா என்ற கேள்வியும் இருக்கும். விசா தேவைப்படுபவர்கள் மூன்று நிமிடங்களுக்குள் செயல்முறையை முடிக்க முடியும்.

உங்கள் டிக்கெட்டுடன் வரும் விசாவைப் பயன்படுத்தி, ஜித்தா விமான நிலையம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நீங்கள் இறங்கலாம். பயணத்தை முடித்துக் கொண்டு வசதியான விமான நிலையத்திலிருந்தும் திரும்பலாம்.