சவுதியில் வீட்டுப் பணியாளர்களும் வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்!

சவுதியில் வீட்டுப் பணியாளர்களும் வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்!

ரியாத்: சவுதி அரேபியாவில் தற்போது பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களும் தங்களது வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும் என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகத்தின் முசானிட் தளத்தின் மூலம் இது பதிவு செய்யப்பட உள்ளது. பணிக்காலம், சம்பளம், பொறுப்புகள் மற்றும் விடுமுறை அனைத்தும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

இதுவரை சவுதி அரேபியாவுக்கு புதிய விசா மூலம் வரும் வீட்டு வேலை செய்பவர்கள் மட்டுமே முசானிட் மூலம் வேலை ஒப்பந்தத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றிருந்த நிலையில், இனி சவுதியில் இருக்கும் அனைத்து வீட்டுப் பணியாளர்களும் கட்டாயமாக வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

அனைத்து ஸ்பான்சர்களும் தங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கு ஒரு நிலையான கால வேலை ஒப்பந்தம் உள்ளதா என்பதை முசானிட் மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் இல்லையெனில், ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் விளக்கியுள்ளது.