மழை வேண்டி வியாழக்கிழமை பிரார்த்தனை செய்ய மன்னர் சல்மான் அழைப்பு!

மழை வேண்டி வியாழக்கிழமை பிரார்த்தனை செய்ய மன்னர் சல்மான் அழைப்பு!

ரியாத்: மழை வேண்டி பிரார்த்தனை செய்ய சவுதி ஆட்சியாளர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அழைப்பு விடுத்துள்ளார். நவ.17 வியாழன் அன்று நாடு முழுவதும் மழை வேண்டி பிரார்த்தனை செய்யுமாறு மன்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

மனந்திரும்புதல், மன்னிப்பு மற்றும் கருணைக்காக அனைவரும் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு மன்னர் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். ராயல் கோர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை வேண்டி பிரார்த்தனை செய்வது நபிகள் நாயகத்தின் நல்ல செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.